பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா மருத்துவமனையில் அனுமதி

அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா மருத்துவமனையில் அனுமதி
Published on

பியூனோஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் டீகோ மரடோனா (வயது 60). கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை அர்ஜென்டினாவின் லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து உள்ளனர்.

இதுபற்றி அவரது மருத்துவர் லியோபோல்டோ லூக் கூறும்பொழுது, கொரோனா பாதிப்புக்காக மரடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உடல் பாதிப்புகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இதேபோன்று, அதிக அளவில் மதுபானம் உட்கொண்டது, மனரீதியாக பாதிக்கப்பட்டது மற்றும் அவரது அனைத்து சுகாதார விசயங்களாலும் மரடோனாவின் உடல்நிலையில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மரடோனா மருத்துவமனையில் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று கொள்வார் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com