இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி ஒத்திவைப்பு

17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டி ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 17-வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற இருந்தது. கொல்கத்தா, கவுகாத்தில், புவனேஷ்வர், அகமதாபாத், நவி மும்பை ஆகிய 5 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற இருந்தது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை போட்டி தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிபா அறிவித்துள்ளது.

16 அணிகள் இந்தப் போட்டித்தொடரில் பங்கேற்க இருந்தன. இந்தியா போட்டியை நடத்துவதால், தானகவே தகுதி பெற்றது. 17-வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்தியா முதன் முதலில் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com