உலகக் கோப்பை கால்பந்து: ஈரான் அணி பங்கேற்கும்...பிபா தலைவர்

. இதில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட் டுள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து: ஈரான் அணி பங்கேற்கும்...பிபா தலைவர்
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட் டுள்ளன. இதன் 'ஜி' பிரிவில் ஈரான், பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஈரான் அணியின் லீக் ஆட்டங்கள் (ஜூன் 15, 21, 26) அமெரிக்காவில் நடக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா மற் றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து போர் தொடுத்ததை அடுத்து ஈரான் அணி, அமெரிக்கா சென்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுமா? என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.இதனால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும் என்று ஈரான் கால்பந்து சம்மேளனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி நிச்சயம் பங்கேற்கும் என்று சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ உறுதிபட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'உலகக் கோப்பை போட்டிக்கு ஈரான் அணி நிச்சயம் வரும். அதற்குள் அங்குள்ள சூழ்நிலை அமைதியானதாக மாறும் என்று நம்புகி றோம். ஈரான் அணி கண்டிப்பாக வரும். ஏனெனில் அவர்கள் தங்கள் நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வீரர்களும் விளையாட விரும்பு கின்றனர்என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com