உலகக் கோப்பை கால்பந்து: லீக் போட்டிகளை தவறவிடுகிறாரா நெய்மார்? - பிரேசில் பயிற்சியாளர் கொடுத்த அதிர்ச்சி தகவல்

பிரேசில் அணி, நாளை தனது முதல் போட்டியில் மொராக்கோவை எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை கால்பந்து: லீக் போட்டிகளை தவறவிடுகிறாரா நெய்மார்? - பிரேசில் பயிற்சியாளர் கொடுத்த அதிர்ச்சி தகவல்
Published on

நியூ ஜெர்சி,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், மொராக்கோவுக்கு எதிரான பிபா உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் விளையாட மாட்டார் என்று பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி தெரிவித்துள்ளார்.

அனைத்து லீக் போட்டிகளையும் தவறவிட வாய்ப்பு

காயத்தில் இருந்து மீண்டு வரும் நெய்மார், உலகக் கோப்பையின் லீக் போட்டிகள் அனைத்திலும் பங்கேற்க முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதாகவும் அன்செலோட்டி குறிப்பிட்டார்.

குரூப் ‘எப்’ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணி, நாளை தனது முதல் போட்டியில் மொராக்கோவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 19-ம் தேதி ஹைட்டி அணியையும், 24-ம் தேதி ஸ்காட்லாந்து அணியையும் சந்திக்க உள்ளது.

6-வது உலகக் கோப்பையை நோக்கும் பிரேசில்

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில், இந்த முறை 6-வது உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கியுள்ளது. ஆனால் தொடரின் ஆரம்ப கட்டத்தில் நெய்மர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அதேநேரத்தில், அனுபவம் மற்றும் திறமையான இளம் வீரர்களின் பலத்தில் நம்பிக்கை வைத்து பிரேசில் அணி தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com