தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவிப்பு

கோப்புப்படம்
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டிமாக் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
புதுடெல்லி,
2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கால்பந்து சம்மேளனம் இறங்கியுள்ளது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






