நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ


நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
x

கோப்புப்படம்

தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

லிஸ்பன்,

கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகிறார். ரொனால்டோ கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார்.

தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

விலையுயர்ந்த வைர மோதிரத்துடன் ஜார்ஜினாவுக்கு, ரொனால்டோ பிரப்போஸ் செய்துள்ளார். இந்த மோதிரம் 10 முதல் 15 காரட் வரை இருக்கலாம் என்றும் அதன் விலை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story