

நியூஜெர்சி,
உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. அந்த வகையில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரேசில் மொராக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் பிரேசில் வீரர் நெய்மார் காயம் காரணமாக விளையாடவில்லை.
நெய்மார் தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். . இது குறித்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி கூறுகையில், 'நெய்மார் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவர் அணியினருடன் அடுத்த வாரம் பயிற்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் குறைந்தபட்சம் ஹைதிக்கு எதிரான ஆட் டம் வரை ஆடமாட்டார்' என்றார். பிரேசில் அணியின் லீக் ஆட்டம் 25-ந் தேதி முடிவடைகிறது. லீக் சுற்று ஆட்டங்களில் நெய்மார் ஆடுவது சந்தேகம் தான்.