உலகக் கோப்பை கால்பந்து: கேரளாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

முன்னணி வீரர்களின் பிரமாண்ட கட்-அவுட்டுகளை தண்ணீருக்கு நடுவில் வைத்துள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து: கேரளாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on

திருவனந்தபுரம்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அவை 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அணிகள் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்துகின்றன.

இந்தியாவில் கிரிக்கெட் முதன்மை விளையாட்டாக இருந்தாலும், கேரளாவில் கால்பந்து என்பது மக்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு கலாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. கேரளாவில் உலகக் கோப்பை போட்டிகளின் போது அர்ஜென்டினா , பிரேசில் , போர்ச்சுகல் ரசிகர்களுக்கு இடையே பிரம்மாண்ட பேனர்களை வைப்பதில் கடுமையான போட்டி நிலவும்.

இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதையொட்டி கேரளம் மாநிலம் கோழிக்கோட்டில் லயோனல் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மார் ஆகிய முன்னணி வீரர்களின் பிரமாண்ட கட்-அவுட்டுகளை தண்ணீருக்கு நடுவில் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com