உலகக் கோப்பை கால்பந்து: கடைசி நிமிட கோலால் ஈகுவடாரை வீழ்த்திய ஐவரிகோஸ்ட்

ஈகுவடார் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
உலகக் கோப்பை கால்பந்து: கடைசி நிமிட கோலால் ஈகுவடாரை வீழ்த்திய ஐவரிகோஸ்ட்
Published on

பிலடெல்பியா ,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், 3-வது இடத்தைப் பெறும் சிறந்த 8 அணிகளும் என மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

கோல் இல்லாமல் முடிந்த முதல் பாதி

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஐவரிகோஸ்ட் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் 45 நிமிடங்கள் கோல் ஏதுமின்றி நிறைவடைந்தன.

90-வது நிமிடத்தில் அமாத் டியாலோ அதிரடி

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. குறிப்பாக வெற்றிக்கான கோலை அடிக்க இரு அணியினரும் கடுமையாக போராடினர். ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90-வது நிமிடத்தில் ஐவரிகோஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் அமாத் டியாலோஅசத்தலான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.

ஐவரிகோஸ்ட் வெற்றி

கடைசி நிமிட கோலுக்கு பிறகு ஈகுவடார் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஐவரிகோஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை கைப்பற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com