உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்- குரோஷியா நாளை மோதல்

ரொனால்டோவுக்கு இது 6-வது மற்றும் கடைசி உலகக் கோப்பை தொடராகும்.

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்- குரோஷியா நாளை மோதல்
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி யில் 2-வது ரவுண்டான நாக்-அவுட் சுற்று பரபரப்புக்கும், சுவாரசியத்துக்கும் பஞ்சமில்லாமல் நகருகிறது. இதில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி, குரோஷியாவுடன் கோதாவில் இறங்குகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணிக்கு கனடாவின் டொராண்டோ நகரில் நடக்கிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கிறது. லீக் சுற்றில் அந்த அணி யின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. காங்கோ (1-1), கொலம்பி யாவுடன் (0-0) டிரா செய்த போர்ச்சுகல் மற்றொரு ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் புதுமுக அணியான உஸ்பெகிஸ்தானை தோற்கடித்தது.

41 வயதான ரொனால்டோவுக்கு இது 6-வது மற்றும் கடைசி உலகக் கோப்பை தொடராகும். தனது கடைசி உலகக் கோப்பையில் ஆடும் அவர் அணியை கரைசேர்ப்பாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

'எல்' பிரிவில் அங்கம் வகித்த 1குரோஷியா லீக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. மற்ற இரு ஆட்டங்களில் பனாமா, கானாவை வீழ்த்தி தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்றது. 201 சர்வ தேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த கேப்டன் லூக்கா மோட்ரிச், பெரிசிச், பீட்டர் சுசிச், கோவாசிச், டொமினிக் லிவாகோவிச் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com