குறைந்த விலையில் கால்பந்து உலகக் கோப்பை டிக்கெட்: ரசிகர்கள் மகிழ்ச்சி

டிக்கெட்டு களை மலிவு விலையில் வழங்க இருப்பதாக அந்த நகர மேயர் ஜோரான் மம்தானி அறிவித்துள்ளார்.
குறைந்த விலையில் கால்பந்து உலகக் கோப்பை டிக்கெட்: ரசிகர்கள் மகிழ்ச்சி
Published on

நியூயார்க்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடு களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 48 அணி கள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்காவில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா உள்பட 11 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. நியூயார்க்கில் மட்டும் இறுதிசுற்று உள்பட மொத்தம் 8 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இந்த நிலையில் நியூ யார்க் மக்களுக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டு களை மலிவு விலையில் வழங்க இருப்பதாக அந்த நகர மேயர் ஜோரான் மம்தானி அறிவித்துள்ளார்.

84 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயார்க் குடியிருப்புவாசிகளில் அதிர்ஷ்டசாலி களாக தேர்வாகும் மொத்தம் ஆயிரம் பேருக்கு தலா 50 அமெரிக்க டாலர் விலையில் (இந்திய மதிப்பில் ரூ.4.780) டிக்கெட் வழங்கப்படும் என்று தெரி வித்துள்ளார். இந்த விலை நியூயார்க்கில் 5 லாட்டே காபிகளின் விலைக்கு சமம் என நகைச்சுவையாக குறிப்பிட்ட மம்தானி, இங்கு நடக்கும் 8 ஆட் டங்களில் 7 ஆட்டங்களுக்கு 150 டிக்கெட் வீதம் சலுகை விலையில் அளிக் கப்படும். இறுதிப்போட்டிக்கு மட்டும் இது பொருந்தாது என்றும் குறிப்பிட் டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com