கால்பந்து உலகின் முதல் பில்லியனர்: வரலாறு படைத்த ரொனால்டோ

சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்புக்காக விளையாடும் ரொனால்டோ, அந்த ஒப்பந்தத்தை இரு ஆண்டுக்கு நீட்டித்து கையெழுத்திட்டுள்ளார்.
கால்பந்து உலகின் முதல் பில்லியனர்: வரலாறு படைத்த ரொனால்டோ
Published on

நியூயார்க்,

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,400 கோடி) என பங்கு வர்த்தகத்தை மதிப்பிடு செய்யும் புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்புக்காக விளையாடும் ரொனால்டோ, அந்த ஒப்பந்தத்தை இரு ஆண்டுக்கு நீட்டித்து கையெழுத்திட்டுள்ளார். அதன் மதிப்பு ரூ.3,550 கோடியாகும். அத்துடன் பிரபல நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்ததன் மூலம் அவரது வருவாய் மேலும் எகிறியுள்ளது. 40 வயதான ரொனால்டோ சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர் (141 கோல்) என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com