பிரான்ஸ் பயிற்சியாளர் புதிய சாதனை

உலகக் கோப்பையில் அவரது பயிற்சியின் கீழ் பிரான்சுக்கு கிடைத்த 18-வது வெற்றியாகும்
பிரான்ஸ் பயிற்சியாளர் புதிய சாதனை
Published on

வாஷிங்டன்,

பிரான்ஸ் முன்னாள் வீரரான 57 வயதான டிடியர் டெசாம்ப்ஸ் அந்த நாட்டு கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையில் பிரான்ஸ் 2014-ம் ஆண்டு காலிறுதியுடன் வெளியேறியது. 2018-ல் மகுடம் சூடியது. 2022-ல் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்றது.

தற்போது நாக் அவுட் சுற்றில் சுவீடனை பிரான்ஸ் வீழ்த்தியிருப்பது உலகக் கோப்பையில் அவரது பயிற்சியின் கீழ் பிரான்சுக்கு கிடைத்த 18-வது வெற்றியாகும். அத்துடன் உலகக் கோப்பை யில் அதிக வெற்றிகளை குவித்த பயிற்சியாளர் என்ற சாதனையை படைத்துள் ளார். சர்வதேச கால்பந்து சம்மேளனமும் (பிபா) இதற்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com