

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, செனகலுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இரட்டை கோல் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
செனகலுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், சர்வதேச கால்பந்தில் எம்பாப்பேவின் மொத்த கோல் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்தது. அவர் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை எட்டியுள்ளார்.
இதன் மூலம், பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிலியன் எம்பாப்பே பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒலிவியர் ஜிருட் 137 போட்டிகளில் 57 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி எம்பாப்பே புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து கிலியன் எம்பாப்பே கூறியதாவது:-
"எனது நாட்டிற்காக மேலும் ஒரு சாதனையை படைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை நான் எப்போதும் செய்ய விரும்பினேன். ஆனால் நாங்கள் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.
பிரான்ஸ் அணிக்காக வரலாறு படைக்கவும், அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உலகக் கோப்பையை வெல்வதை உறுதி செய்யவும் தான் நான் விளையாடுகிறேன். மற்ற சாதனைகள் அனைத்தும் எனது கால்பந்து வாழ்க்கையில் என்னை அடையாளப்படுத்தும் ஒரு பகுதியாகவே இருக்கும்" என்றார்.
தனிநபர் சாதனைகளை விட அணியின் வெற்றிக்கே முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ள எம்பாப்பே, பிரான்ஸ் அணியை மீண்டும் உலகக் கோப்பை சாம்பியனாக்கும் இலக்குடன் விளையாடி வருகிறார்.