

லண்டன்
ஆங்கில கால்பந்து கழகத் தலைவர் கிரெக் கிளார்க், கறுப்பின வீரர்கள் குறித்து அவர் கூறிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"வண்ண நிற கால்பந்து வீரர்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்திய அவர் செய்த குற்றத்திற்காக "மிகவும் வருத்தப்படுவதாக" கிளார்க் கூறி உள்ளார்.கால்பந்தில் அந்த மாறுபட்ட சமூகங்களை நான் புண்படுத்தியதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
கிரெக் கிளார்க் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். பீட்டர் மெக்கார்மிக் இடைக்கால கால்பந்து கழகத் தலைவராக உடனடியாக செயல்படுவார், மேலும் ஒரு புதிய தலைவரை நியமிக்கும் செயல்முறை சரியான நேரத்தில் தொடங்கப்படும் என கால்பந்து கழகம் தெரிவித்து உள்ளது.