ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி..!!

ஒரு தகுதி சுற்று போட்டி மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.
Image Courtesy : Twitter @IndianFootball
Image Courtesy : Twitter @IndianFootball
Published on

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு ஏற்கனவே 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான  3-வது கட்ட தகுதி சுற்று போட்டியின் 'டி' பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

இந்த தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி தங்கள் கடைசி போட்டியில் ஹாங்காங் அணியுடன் இன்று மோதுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில் பாலஸ்தீன் அணியிடம் பிலிப்பைன்ஸ் தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒரு தகுதி சுற்று போட்டி மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com