தெற்காசிய கால்பந்து: 4-வது கோப்பை கனவு உடைந்தது…பெனால்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்

4 முறை சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
தெற்காசிய கால்பந்து: 4-வது கோப்பை கனவு உடைந்தது…பெனால்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்
Published on

மாலே,

20 வயதுக்குட்பட்டோருக்கான 8வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

4 முறை சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் முழு நேரத்திலும் கோல் எதையும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றது.

Also Read
கேண்டிடேட்ஸ் செஸ்: 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா ‘டிரா’
தெற்காசிய கால்பந்து: 4-வது கோப்பை கனவு உடைந்தது…பெனால்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்

பெனால்டி ஷூட்-அவுட்டில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், வங்காளதேச அணி 4-3 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் வங்காளதேசம் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com