17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: குவைத் அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்!

ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி குரூப்-டி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: குவைத் அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்!
Published on

அல் கோபார்(சவுதி அரேபியா),

ஏஎப்சி - 17 வயதுக்குட்பட்டோருக்கன ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில், குவைத் அணியை எதிர்கொண்டது. அதில், குவைத் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு தொடர் வெற்றிகளைப் பெற்ற குவைத் வலுவான எதிரணியாக இருந்தது. இருப்பினும், இந்தியா போட்டியின் முதலில் இருந்தே தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா, குரூப்-டி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.இந்தியா தனது முதல் ஆட்டத்தில் மாலத்தீவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மியான்மர் அணியை நாளை எதிர்கொள்ள உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com