கனத்த இதயத்துடன் ஓய்வு பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

151 போட்டிகளில் விளையாடி சுனில் சேத்ரி 94 கோல்களை பதிவு செய்துள்ளார்.
Image :Indian Football Team
Image :Indian Football Team
Published on

கொல்கத்தா,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் இறுதி வரை 2 அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த நிலையில் இந்த போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இருந்து இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி விடைபெற்றார். போட்டி முடிந்து மைதானத்தை விட்டு செல்லும் போது கண்ணீருடன் வெளியேறினார். இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடி வீரர் சுனில். 151 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும் 50 சர்வதேச கோல்கள் அடித்த முதல் இந்திய வீரர் சுனில் சேத்ரி ஆவார்.இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com