இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இழக்கும் இந்திய கால்பந்து அணி

இந்திய கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இழக்க உள்ளது
இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இழக்கும் இந்திய கால்பந்து அணி
Published on

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்திய கால்பந்து அணியை அனுப்ப அகில இந்திய கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டு இருந்தது.

ஆனால் குழு போட்டியை பொறுத்தமட்டில் ஆசிய தரவரிசையில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகள் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டு போட்டியை தவற விட நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com