நட்புறவு கால்பந்து போட்டி: வியட்நாம், சிங்கப்பூர் அணிகளை எதிர்கொள்ளும் இந்திய கால்பந்து அணி

செப்டம்பர் 24 அன்று சிங்கப்பூர் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி செப்டம்பர் 27-ல் வியட்நாமை எதிர்கொள்கிறது.
Image Tweeted By @IndianFootball
Image Tweeted By @IndianFootball
Published on

புதுடெல்லி,

சிங்கப்பூர், வியட்நாமுக்கு எதிராக இந்திய ஆண்கள் கால்பந்து அணி செப்டம்பர் மாதம் இரண்டு சர்வதேச நட்புறவு ஆட்டங்களில் விளையாட உள்ளது. செப்டம்பர் 24 அன்று சிங்கப்பூர் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி செப்டம்பர் 27-ல் வியட்நாமை எதிர்கொள்கிறது.

மூன்று அணிகளும் செப்டம்பர் 21 முதல் 27 வரை ஒன்றுக்கொன்று களம் காண்கின்றன. இறுதியில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்த போட்டிகள் ஹோ சி மின் நகரில் உள்ள தோங் நாட் மைதானத்தில் நடைபெறும் வியட்நாம் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது பிபா உலக தரவரிசையில் இந்திய ஆண்கள் அணி 104 வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் வியட்நாம் 97-வது இடத்திலும் சிங்கப்பூர் 159 வது இடத்திலும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com