

மும்பை,
இந்திய கால்பந்து அணி வருகிற நவம்பர் மாதத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் இரண்டு சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் ஆடுகிறது. இந்த ஆட்டங்கள் நவம்பர் 12-ந் தேதி ஆக்லாந்திலும், 15-ந் தேதி கிறைஸ்ட்சர்ச்சிலும் நடக்கிறது.
இந்திய அணி, நியூசிலாந்து சென்று ஆடுவது இதுவே முதல்முறையாகும். இவ்விரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி, தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றில் ஒரு டிரா, 2 தோல்வி கண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.