

கோவா ,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி விளையாடிய 4 போட்டியில் 3-ல் வெற்றி ,1 -ல் தோல்வி என்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி தாங்கள் விளையாடிய 4 போட்டிகளில் 2-ல் வெற்றி 2-ல் டிரா கண்டு புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் - மும்பை அணிகள் மோதவுள்ள போட்டி என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.