

கொல்கத்தா,
2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி பட்டம் வென்ற மோகன் பகான் அணி, தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். அதே நேரத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் நோக்கில் களமிறங்குகிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் எப் சி கோவா அணி இண்டெர் காசி அணியுடன் மோதுகிறது.
இந்த சீசனில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கிறது. ஒவ்வொரு அணியும் சொந்த, வெளி மைதானங்களில் ஆடும். மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.