ஐ.எஸ்.எல் கால்பந்து : மொராக்கோ வீரரை ஒப்பந்தம் செய்த கோவா அணி

கோவா அணி மொராக்கோ கால்பந்து வீரர் நோவாவை 2 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
Image Courtesy : @FCGoaOfficial
Image Courtesy : @FCGoaOfficial
Published on

கோவா,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கோவா எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் கோவா அணி மொராக்கோ கால்பந்து வீரர் நோவா சடாயுவை 2 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் 2024 ஆம் ஆண்டு வரை கோவா அணிக்காக விளையாடுவார்.

கோவா அணிக்கு தேர்வானது குறித்து நோவா கூறுகையில், "எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை கோவா அணியுடன் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அணி எனக்குப் புதிதல்ல. நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறோம்.

மற்ற நாடுகளில் உள்ள அணிகளில் இருந்தும் எனக்கு அழைப்புகள் இருந்தன. ஆனால் கோவா அணியின் பயிற்சியாளர் என் திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளார். அது தான் நான் அவர்களுடன் சேர்வதற்கான நம்பிக்கையை எனக்கு அளித்தது" என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com