ஐ.எஸ்.எல்.கால்பந்து: மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பெங்களூரு எப்.சி.

பெங்களூரு எப்.சி. அணி அரையிறுதி ஆட்டத்தில் எப்.சி. கோவாவை சந்திக்க உள்ளது.
Image Courtesy: @IndSuperLeague / @bengalurufc 
Image Courtesy: @IndSuperLeague / @bengalurufc 
Published on

பெங்களூரு,

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற 13 அணிகள் தங்களுக்குள் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.

புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6-வது இடங்களை பெற்ற பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி. ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் பெங்களூருவில் இன்று நடக்கும் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை, முன்னாள் சாம்பியன் பெங்களூரு அணிகள் மோதின.

தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக 2வது பாதி ஆட்டத்தில் பெங்களூரு மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது.

இறுதியில் ஆட்ட நேர முடிவில் பெங்களூரு 5-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. பெங்களூரு எப்.சி. அணி அரையிறுதி ஆட்டத்தில் எப்.சி. கோவாவை சந்திக்க உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com