

சென்னை,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி சார்பில் பரூக் சவுத்ரி ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். டெல்லி அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னை அணி 1 -0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது சென்னை அணிக்கு 3-வது வெற்றியாகும். தொடர்ந்து புவனேஸ்வரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - முகமதின் எஸ்.சி. அணிகள் மோதுகின்றன.