ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- முகமதன் அணிகள் இன்று மோதல்

சென்னையின் எப்.சி. 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை- முகமதன் அணிகள் இன்று மோதல்
Published on

சென்னை,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப்பை எதிர்கொள்கிறது.

சென்னையின் எப்.சி. 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் கிளப்பை (டெல்லி) தோற்கடித்த சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரச் செய்து 3-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளது. முகமதன் அணி 8 ஆட்டங்களில் ஆடி ஒரு டிரா, 7 தோல்வி கண்டு கடைசி இடத்தில் இருக்கிறது. வெற்றிக் கணக்கை தொடங்க முடியாமல் தவிக்கும் முகமதனுக்கு எதிராக சென்னை அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் முகமதன் அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com