ஐ.எஸ்.எல் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது சென்னையின் எப்.சி. அணி

சென்னையின் எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
Image Tweeted By @IndSuperLeague/ @ChennaiyinFC
Image Tweeted By @IndSuperLeague/ @ChennaiyinFC
Published on

கொல்கத்தா,

11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் இன்று பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் மன்வீர் சிங் அணியின் முதல் கோலை அடித்தார். அதன்பின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் மோகன் பகான் அணி 1 கோல் முன்னிலையில் இருந்தது.

பின்னர் பரபரப்பாக நடைபெற்ற 2-வது பாதியின் 62-வது நிமிடத்தில் சென்னை வீரர் கவாமே கரிகாரி கோல் அடிக்க போட்டி சமநிலை பெற்றது. இதன் பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். இதில் சென்னை அணிக்கு பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 82 வது நிமிடத்தில் ரஹீம் அலி கோல் அடிக்க சென்னை அணி முன்னிலை பெற்றது.

பின்னர் இறுதிவரையில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் சென்னையின் எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com