ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி கோவா அணி வெற்றி

கோவாவில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. கோவா - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி கோவா அணி வெற்றி
Published on

சென்னை,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. கோவா - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணி சார்பில் தேஜன் டிராசிக் 62-வது நிமிடத்திலும், போல் மொரேனோ 81-வது நிமிடத்திலும், பிரிசன் பெர்னாண்டஸ் 90+4வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் விபி சுஹைர் 90+7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் எப்.சி. கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com