

கொச்சி,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளா அணி சார்பில் விக்டர் ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலும், ஹெர்னான்டஸ் 90+4வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் ரஹிம் அலி ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.