

கொச்சி,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சியில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில், ஆன்டி ரோட்ரிக்ஸ் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் லால்ரின்சுவாலா 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்திருந்தன. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.