

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த கேரளா -மும்பை அணிகள் மோதும் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இந்த போட்டி பின்னர் வேறு ஒரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது