ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 6-வது இடத்துக்கு முன்னேறிய சென்னை

சென்னை அணி 7 வெற்றி, 3 ‘டிரா’, 10 தோல்வி என 24 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Image Courtesy : @ChennaiyinFC
Image Courtesy : @ChennaiyinFC
Published on

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூரை எதிர்கொண்டது. இதில் அபாரமாக செயல்பட்ட சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது.

ஜாம்ஷெட்பூர் அணியில் ரி தச்சிகாவாவும் (22-வது நிமிடம்), சென்னை அணியில் ரபேல் கிரிவெல்லாரோ (52-வது நிமிடம்), ரஹீம் அலியும் (59-வது நிமிடம்) கோல் அடித்தனர். 20-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 7 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி என 24 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி 5 வெற்றி, 6 'டிரா', 10 தோல்வி என 21 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி சி.சி.டி.வி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, அங்கு நடக்க உள்ள பஞ்சாப் எப்.சி. அணிக்குரிய அடுத்த இரு ஆட்டங்களை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று பஞ்சாப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com