ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

image courtesy: Indian Super League twitter
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
ஷில்லாங்,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஷில்லாங்கில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில், நெஸ்டர் ஆட்டத்தின் 59-வது நிமிடத்திலும், அலாதின் 66 மற்றும் 79-வது நிமிடத்திலும், முகமது அலி 86-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு இது 10-வது வெற்றியாகும்.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் - எப்.சி. கோவா அணிகள் மோதுகின்றன.