ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுகாத்தி,

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் ஜெய்ரோ இரண்டு கோலும் (5 மற்றும் 45+1வது நிமிடம்), லால்பியாக்டிகா (90-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர். சென்னை அணியின் வீரர் லால்டின்லியானா (70-வது நிமிடம்) தவறுதலாக'ஓன் கோல்' (Own Goal) அடித்தார். அதற்கு பிராயச்சித்தமாக அவரே தனது அணிக்கு 81-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து கொடுத்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில், சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com