ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்டர் காஷி அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி - இன்டர் காஷி அணியுடன் மோதியது.
ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்டர் காஷி அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி
Published on

கவுகாத்தி,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, அறிமுக அணியான இன்டர் காஷியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் ஜிதின் ஆட்டத்தின் 45+2வது நிமிடத்திலும், ஆன்டி ரோட்ரிக்ஸ் 63-வது நிமிடத்திலும், பர்திப் கோகோய் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இன்டர் காஷி அணி சார்பில் செர்ஜியோ ஆட்டத்தின் 71-வது நிமிடத்திலும், முகமது ஆசிப் கான் 82-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இன்டர் காஷி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com