

கவுகாத்தி,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணி சார்பில் தேஜன் ஆட்டத்தின் 20-வது நிமிடத்திலும், முகமது யசிர் 90+3வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் எப்.சி. கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.