ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா - பெங்களூரு ஆட்டம் டிரா

புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா - பெங்களூரு ஆட்டம் டிரா
Published on

புவனேஸ்வர்,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி சார்பில் ரஹிம் அலி ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பெங்களூரு அணி சார்பில் பிரையன் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஒடிசா எப்.சி. - பெங்களூரு எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com