ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; கோவா - கேரளா அணிகள் இன்று மோதல்...!

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @IndSuperLeague
Image Courtesy: @IndSuperLeague
Published on

கோவா,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கெண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கோவா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் கேரளா அணி முதல் இடத்திலும், கோவா அணி 2வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com