மீண்டும் வருகிறது ஐஎஸ்எல் கால்பந்து தொடர்!


ISL football series is back!
x

இந்த சீசனுக்கான (2025-26) ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்க வேண்டியது.

2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. 14 அணிகள் பங்கேற்கும் என இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிப். 14 முதல் தொடங்கும் இதில் ஒவ்வொரு அணியும் சொந்த, வெளி மைதானங்களில் ஆடும். மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டி வழக்கமாக செப்டம்பரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இந்த சீசனுக்கான (2025-26) ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்க வேண்டியது.

ஆனால், நிதிப் பற்றாக்குறை, நிர்வாக சிக்கல், நீதிமன்ற வழக்குகளால் 2026 சீசன் நடைபெறுமா என கேள்விக்குறி எழுந்தது. இதனால் வீரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவானது. சமீபத்தில் இந்திய கால்பந்தை காப்பாற்ற வேண்டும் என வீரர்கள் இணைந்து வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story