ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பையை வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
Image Courtesy: @IndSuperLeague / @MumbaiCityFC / @KeralaBlasters
Image Courtesy: @IndSuperLeague / @MumbaiCityFC / @KeralaBlasters
Published on

கொச்சி,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொச்சியில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்சை சந்தித்தது.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயா (52வது நிமிடம்) கேரளா அணி கோல் அடித்து அசத்தியது. இதன் காரணமாக அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஈஸ்ட் பெங்கால் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் - கோவா அணிகள் மோத உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com