ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; மும்பை சிட்டி எப்.சி - ஒடிசா அணிகள் இன்று மோதல்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
Image Courtesy: @IndSuperLeague
Image Courtesy: @IndSuperLeague
Published on

மும்பை ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற உள்ளது.

இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - ஒடிசா அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஒடிசா 5 ஆட்டங்களில்2 வெற்றி, 1 டிரா, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள மும்பை 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com