போட்டி முடிந்ததும் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்

இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.
போட்டி முடிந்ததும் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இதில் அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் உள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, ஜப்பானை (எப் பிரிவு) சந்தித்தது.

திரில்லிங்கான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.

நெதர்லாந்து- ஜப்பான் அணிகள் இடையிலான போட்டி முடிந்ததும் ஜப்பான் ரசிகர்கள் தாங்கள் அமர்ந்து இருந்த கேலரிகளில் கிடந்த குப்பை களை அகற்றி ஸ்டேடியத்தை சுத்தம் செய்தனர். அவர்கள் பொது இடத்தில் தங்களுடைய இயல்பான குணத்தை மீண்டும் வெளிப்படுத்திய விதம் மக்கள் மனதை கவர்வதாக இருந்தது. இந்த வீடி யோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com