ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து - இந்திய அணி அறிவிப்பு

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: Indian Football Team
Image Courtesy: Indian Football Team
Published on

புவனேஷ்வர்,

7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோருக்கான) இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் வருகிற 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, மொராக்கோ, பிரேசில் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இந்திய அணி தனது லீக் ஆட்டத்தில் வருகிற 11-ந் தேதி அமெரிக்காவையும், 14-ந் தேதி மொராக்கோவையும், 17-ந் தேதி பிரேசிலையும் எதிர்கொள்கிறது. இந்த 3 ஆட்டங்களும் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 21 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: மோனலிஷா தேவி மொய்ராங்தெம், மெலோடி சானு கெய்ஷம், அஞ்சலி முண்டா, பின்களம்: ஆஸ்டம் ஓரியன், காஜல், நகிதா, பூர்ணிமா குமாரி, வர்ஷிகா, ஷில்கி தேவி ஹிமான், நடுகளம்: பபினாதேவி லிஷம், நிது லிண்டா, ஷைலஜா, சுபாங்கி சிங், முன்களம்: அனிதா குமாரி, லிண்டாகோம் செர்டோ, நேஹா, ரிஜியாதேவி லைஷ்ரம், ஷீலா தேவி லோக்டாங்பாம், கஜோல் ஹூபெர்ட் டிசோசா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா திர்கே.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com