

ஜப்பான்,
சர்வதேச கால்பந்தில் ஆசியாவின் முன்னணி அணிகளில் ஒன்றான ஜப்பான், கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக 2019-ம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு ஐரோப்பிய அணி கூட ஜப்பானை தோற்கடித்ததில்லை.
2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் பதிவு செய்த முக்கிய முடிவுகள்:
வலுவான செர்பியா அணியை 1-0 என்ற கணக்கிலும், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது. தொடர்ந்து, உலகத்தரம் வாய்ந்த ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சாய்த்து வியப்பிலாழ்த்தியது.
இதற்கிடையில், குரோஷியாவுடன் மோதிய போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. எனினும், மீண்டும் ஜெர்மனியுடன் களம் கண்டபோது, 4-1 என்ற அதிரடியான கோல் கணக்கில் அந்த அணியை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது. அதைத்தொடர்ந்து, துருக்கிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் 4-2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது.
மேலும், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தலா 1-0 என்ற கணக்கில் வெற்றிகளைப் பதிவு செய்தது. நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டாம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
2026 உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘எப்’ பிரிவில் ஜப்பானுடன் நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்த தொடரில் ஜப்பான் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 2-2 என டிரா செய்தது. இதன் மூலம் ஐரோப்பிய அணிகளுக்கு எதிரான தோல்வியில்லா பயணம் தொடர்கிறது.