கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; சென்னையின் எப்.சி அணி முதல் வெற்றி...!

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - கோகுலம் கேரளா அணிகள் மோதின.
image courtesy; twitter/ @ChennaiyinFC
image courtesy; twitter/ @ChennaiyinFC
Published on

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் டிரா செய்தது. இந்நிலையில் சென்னையின் எப்.சி. தனது 2-வது ஆட்டத்தில் கோகுலம் கேரளா அணியுடன் இன்று மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. 2-0 என்ற கோல் கணக்கில் கோகுலம் கேரளா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை அணி தரப்பில் கானர் ஷீல்ட்ஸ் மற்றும் இர்பான் யாத்வாட் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com