ஐ.எஸ்.எல் கால்பந்து : புதிய வெளிநாட்டு வீரரை ஒப்பந்தம் செய்தது கேரளா அணி

இந்த சீசனுக்கான முதல் வெளிநாட்டு வீரரை கேரளா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
Image Tweeted By @KeralaBlasters
Image Tweeted By @KeralaBlasters
Published on

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி, சிறந்த அணியை வலுவாக கட்டமைக்க புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த சீசனுக்கான முதல் வெளிநாட்டு வீரரை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கிரேக்க-ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ்டோலோஸ் கியானோவை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கவாலா, எத்னிகோஸ் போன்ற பல கிரேக்க முதல்-பிரிவு அணிகளுக்காக 150 க்கும் மேற்பட்ட போட்டிகளில் 38 கோல்களையும் 15 அஸ்சிஸ்ட் கோல்களையும் பதிவு செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com