மெஸ்சிக்கு 'தல' பட்டம் கொடுத்த பிபா? - தோனியுடன் ஒப்பிட்டு வெளியான போஸ்டர் வைரல்

தோனி மற்றும் மெஸ்சி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த போஸ்டரை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
மெஸ்சிக்கு 'தல' பட்டம் கொடுத்த பிபா? - தோனியுடன் ஒப்பிட்டு வெளியான போஸ்டர் வைரல்
Published on

பியூனஸ் அயர்ஸ்,

மெஸ்சிக்கு பிபா 'தல' பட்டம் வழங்கியிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.

மெஸ்சியின் மாயாஜாலம்

2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிராக அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பிபா வெளியிட்ட போஸ்டர்

இந்த வெற்றிக்கு பிறகு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா (FIFA) சமூக வலைதளங்களில் மெஸ்சியை பாராட்டும் வகையில் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகர்களிடையே பிரபலமான "தல" (Thala) என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தோனி மற்றும் மெஸ்சி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த போஸ்டரை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

தோனி - மெஸ்சி ஒற்றுமை

இந்திய கிரிக்கெட்டில் தோனி தனது அமைதியான அணுகுமுறை மற்றும் சிறந்த வியூகங்களுக்காக பெயர் பெற்றவர். அதேபோல், மெஸ்சியும் மைதானத்தில் அதிகம் பேசாமல் தனது ஆட்டத்தின் மூலம் பதிலளிப்பவர். தங்களிடம் உள்ள திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தும் திறன் இருவருக்கும் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

உலகக் கோப்பை கனவு

லியோனல் மெஸ்சி 2006-ம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். அதன்பிறகு 2010, 2014 மற்றும் 2018 தொடர்களிலும் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இறுதியாக தனது 5-வது முயற்சியான 2022 உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை சாம்பியனாக்கி தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்.

ரொனால்டோவுக்கு 'Thala for a Reason'

கடந்த 2024-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புகைப்படத்தை பகிர்ந்த பிபா, "Thala for a Reason" என்ற வாசகத்துடன் பதிவு வெளியிட்டிருந்தது. தற்போது மெஸ்சிக்கும் 'தல' பட்டம் வழங்கியிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com