பிரீமியர் லீக் கால்பந்து: கொரோனா தொற்று எதிரொலி காரணமாக போட்டி ரத்து

ப்ரென்ட்போர்டு - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடையே நடைபெற இருந்த போட்டி கொரோனா தொற்று எதிரொலி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரீமியர் லீக் கால்பந்து: கொரோனா தொற்று எதிரொலி காரணமாக போட்டி ரத்து
Published on

லண்டன் ,

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ப்ரென்ட்போர்டு - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இடையே இன்று நடைபெற இருந்த போட்டி கொரோனா தொற்று எதிரொலி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிரீமியர் லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,"மான்செஸ்டர் யுனைடெட் அணியில் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மருத்துவ ஆலோசகர்களின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து ப்ரெண்ட்ஃபோர்ட்-யுனைடெட் அணிகள் இன்று பங்கேற்க இருந்த போட்டி ரத்து செய்யப்படுகிறது " என

தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com